உங்க குழந்தை உயரமா வளரனுமா? அப்போ இதை கண்டிப்பாக பண்ணுங்க!

நமது குழந்தை உயரமாக இருப்பதும் குள்ளமாக இருப்பதும் அவர்களது ஜீன்கள் தீர்மானிக்கின்றன. ஆனால் சிலவகை உணவுகள் மூலம் குள்ளமாக இருப்பவர்ளை உயரமாகலாம். அதற்கு முக்கியமாக இருப்பது முட்டையாகும். மேலும் கால்சியம் சத்துக்கள் இதற்கு பெரும் பங்கு வகிக்கிறது.

எனவே குள்ளமான பரம்பரையில் வந்தவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் அதிக கால்சியம் உள்ள உணவுகளை கொடுத்து வந்தால் அவர்களின் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும். மேலும் சில உயரமாகும் குறிப்புகளை தற்போது பார்க்கலாம்.

சிறு வயது முதல் தினமும் முட்டை சாப்பிடுவதால் உடல் நல கோளாறுகள் எதுவும் ஏற்படாது மாறாக ஊட்டச்சத்து அதிகரிக்கும். முட்டையில் உள்ள புரதச்சத்துக்கள் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவுகிறது. இருப்பினும் முட்டையின் மஞ்சள் கரு தங்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ராலை உயர்த்தும் என்ற தவறான கருத்து சிலரிடையே உள்ளது.

ஆனால் அந்த கருத்து தவறு முட்டையின் மஞ்சள் கரு மற்றும் உட்புற வெள்ளை பகுதி இரண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். முட்டையின் மஞ்சள் கருவில் விட்டமின்கள் எ,இ,கே மற்றும் ஒமேகா நிறைந்துள்ளது. ஒருவருக்கு குறைவான இம்யூனிட்டி பவர் இருந்தால் அவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.