சிறுவர்களுக்கு கோவிட் வேக்சின்- இன்று தொடங்கி வைக்கும் முதல்வர்

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகள் செலுத்தி வருகிறது.

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அதிகமான கொரொனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் சிறுவர் சிறுமிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கிறார்.

இதற்கான முன்பதிவை கோவின் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.  தமிழ்நாட்டில் பள்ளிகளிலேயே முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் சென்னை மாந்தோப்பில் இத்திட்டத்தை இன்று துவங்கி வைக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment