100 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.. ஆனாலும் கைகூடாத ஆசை.. பிரபல சீரியல் நடிகையின் சகோதரர் கதை

தமிழில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் பாக்யராஜ். திரைக்கதை என்றாலே உடன் ஞாபகத்துக்கு வரும் ஒரு பெயர் என்றால் அது பாக்யராஜ் தான். இவரது பல சூப்பர்ஹிட் படங்கள் திரைக்கதைக்காகவே சக்கை போடு போட்டுள்ளது. இவர் நடித்து இயக்கிய திரைப்படங்களில் ஒன்று தான் மௌன கீதங்கள். இதில் பாக்யராஜ் மகனாக நடித்தவர் மாஸ்டர் சுரேஷ். இவரை பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் சுரேஷ் என்ற பெயரில் நடித்தவர் பின்னாளில் தனது பெயரை சூர்யா கிரண் என்று மாற்றிக் கொண்டார். சிறு வயதிலேயே நடிக்க வந்த அவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

கல்லுக்குள் ஈரம், மௌன கீதங்கள், கடல் மீன்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, படிக்காதவன், நீதியின் மறுபக்கம், மங்கம்மா சபதம், உட்பட பல திரைப்படங்களில் கடந்த 1980 களில் குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் சுரேஷ் என்ற பெயரில் நடித்தார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் சில காலங்கள் நடிப்பில் இருந்து விலகிவிட்டார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையுலகில் நடிகராக என்ட்ரி கொடுக்காமல் இயக்குனராக அறிமுகமானார். அப்போது அவர் தனது பெயரை சூர்யா கிரண் என்று மாற்றிக் கொண்டார். அவரது இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ’சத்யம்’. பிரபல தெலுங்கு நடிகர் சுமந்த் மற்றும் ஜெனிலியா நடித்த இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் தெலுங்கில் 100 நாட்கள் ஓடி சாதனை செய்தது.

surya kiran

இயக்குனராக முதல் படத்தில் வெற்றி பெற்ற சூர்யா கிரண் அதன்பிறகு  சுமந்த் நடிப்பில் உருவான இன்னொரு திரைப்படமான ’தனா 51’ என்ற படத்தை இயக்கினார்.  இந்த படம் சுமாரான வெற்றியை பெற்ற நிலையில் அதனை அடுத்து அவர் ஜெகபதிபாபு நடித்த பிரம்மாஸ்திரம் என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன் பிறகு மனோஜ் மஞ்சு நடிப்பில் உருவான ஒரு படத்தை இயக்கினார். மொத்தமே  ஐந்து திரைப்படங்கள் மட்டுமே இயக்கியவர் அதன் பின்னர் பத்து ஆண்டுகள் திரையுலகில் இருந்தே விலகி இருந்தார்.

அதன்பின் 2020ஆம் ஆண்டு தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அவர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் முதல் வாரமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக சூர்ய கிரணுக்கு எந்த விதமான வாய்ப்பு இல்லை என்றாலும் அவர் சிறுவயதில் நடித்த பல திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி அவரை ரசிகர்கள் மத்தியில் ஞாபகப்படுத்தி வருகிறது.
Surya kiran : నేను విడాకులు వద్దు అని కళ్యాణి కి చెప్పే స్థాయిలో లేను : సుజిత - We Coudnt Make Possible For Kalyani And Surya Kiran

நடிகை கல்யாணியை இவர் திருமணம் செய்திருந்த நிலையில், அவர்கள் இருவரும் சில காரணங்களால் பின்னர் விவாகரத்து செய்து கொண்டனர். அதே போல, சீரியலில் பிரபலமாக இருக்கும் நடிகை சுஜிதாவின் சகோதரர் தான் சூர்யா கிரண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.