மீனாவுடன் அறிமுகமான பிரபல நடிகர் டிங்கு.. நடிப்பில் இருந்து ஒதுங்கி வேற ரூட் எடுத்த கதை..

தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்த பலரும் தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகள் என்ற உயரத்திற்கு வருவார்கள். அதே வேலையில், சிலர் இன்னொரு பக்கம் திரும்பி வேறு வழியில் பயணிக்கவும் வாய்ப்புள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஒரு நடிகரை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.

தன்னுடைய ஆறு வயதில் ’அன்புள்ள ரஜினிகாந்த்’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகர் டிங்கு. இந்த படத்தில் நடிகை மீனாவும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதனையடுத்து வைதேகி காத்திருந்தாள், ஜப்பானில் கல்யாணராமன், வருஷம் 16, உயிரே உனக்காக, ஆளப்பிறந்தவன், பாசப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்தார். 6 வயது முதல் 15 வயது வரை அவர் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக அவர் நடித்து வந்தார்.

இருப்பினும் அவருக்கு நடிப்பைவிட நடனத்தில் தான் மிகுந்த ஆர்வம் இருந்தது. முறைப்படி நடனத்தை கற்றுக் கொண்ட அவர் நடன துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்பினார். இந்த நிலையில் தான் 24 வயதில் அவருக்கு ஜெயா என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதன் பிறகு ஏழு ஆண்டுகளுக்கு அடுத்து 31-வது வயதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான சரோஜா என்ற திரைப்படத்தில்  சிறப்பு தோற்றத்தில் மட்டும் நடித்திருப்பார்.

tingu1

திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் சிலவற்றில் நடித்திருக்கிறார். கனா காணும் காலங்கள், கோலங்கள், லட்சுமி, திருமதி செல்வம், உள்ளிட்ட சீரியல்களில் நடித்தாலும் அவருக்கு டான்ஸ் துறையில் தான் அதிக ஆர்வம் இருந்தது. ஜோடி நம்பர் ஒன் என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு டைட்டில் பட்டம் கிடைத்தது.

இந்த நிலையில் நடிகர் டிங்கு கடந்த 2000 ஆண்டு சுப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டு 2009 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதனை அடுத்து 2010 ஆம் ஆண்டு கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது வெளிநாட்டில் செட்டில் ஆகி அங்கேயே நடன பள்ளி ஒன்றை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இயக்குனருமான போஸ் வெங்கட் இவருக்கு நெருங்கிய உறவுமுறை உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.