பொதுவாகவே இந்த உலகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பச்சிளம் குழந்தைகள் கூட பாலியல் தொந்தரவுக்கு சில கயவர்களால் ஆளாகின்றனர்.
இந்தியாவிலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அப்படி புகார்கள் வரும் பட்சத்தில் போலீசார் எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் பற்றி டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
அப்படி குற்றங்கள் நடந்தால் புகார் தரப்பட்டால் உடனடியாக விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
குழந்தையின் பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தால் ஆலோசகரை நியமித்து சாட்சியாக பயன்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ உதவியும் உடனே வழங்க வேண்டும் என காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.