அள்ளிக் கொடுக்கும் முதல்வர்! ஆடிப்போன கொளத்தூர் மக்கள்!!

தற்போது தமிழக முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின்.தமிழகத்தில் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.மு க ஸ்டாலின்

தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டுவருகிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். அதன் வரிசையில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

16 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கினார். ஐந்து பேருக்கு திருமண நிதியுதவி, ஐந்து பேருக்கு தையல் இயந்திரம் போன்றவற்றையும் வழங்கினார் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

கணவனால் கைவிடப்பட்டோர், முதியோர்கள் என 197 பேருக்கு நலிந்தோர் நிவாரண உதவிகளையும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

விபத்தில் பாதிக்கப்பட்ட 312 பேர், கொரோனாவால் பெற்றோரில் ஒருவரை இழந்த 18 குழந்தைகளுக்கு காசோலைகளை வழங்கினார் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment