Connect with us

முதல்வர் பதவி ராஜினாமா: அரசியலில் பெரும் திருப்பம்!

News

முதல்வர் பதவி ராஜினாமா: அரசியலில் பெரும் திருப்பம்!

3b75b05bbdb027beaaec9c6920b2913a

 பஞ்சாப் மாநில முதல்வர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அம்ரீந்தர்சிங் அவர்களுக்கும், அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்து அவர்களுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. 

இந்த நிலையில் இன்று திடீரென பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர்சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனக்கு மிகவும் நெருக்கடி ஏற்பட்டதாகவும் அதனால் பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் அடுத்த முதல்வராக நவ்ஜோத்சிங் சித்து அவர்கள் விரைவில் பதவி ஏற்பார் என்று பஞ்சாப் மாநில அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. பஞ்சாப் மாநில முதல்வர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top