செய்திகள்
“இனி வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்” முதலமைச்சர் கடிதம்!!
தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. மேலும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆனது தமிழகத்தின் இக்கட்டான நிலையில் ஆட்சிக்கு வந்தது என்றே கூறலாம். திமுக ஆட்சி பொறுப்பை ஏற்கும்போது தமிழகத்தில் நோய்தொற்றும் அதிகமாக இருந்தது. இதனால் ஆட்சியின் ஆரம்பம் முதலே நோய் கட்டுப்பாட்டை மிகவும் தீவிரமாக பின்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது திமுக என்றே கூறலாம்.
நம் தமிழகத்தில் தற்போது தடுப்பூசி போட்டுகொள்வோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழ்நாட்டுக்கு 50 லட்சம் தடுப்பூசி கேட்டு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. மேலும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
மேலும் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அதிக அளவு தடுப்பூசி போடுவதை சுட்டிக்காட்டி பிரதமருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டுக்கு இதுவரை போதிய தடுப்பூசிகளை வழங்கிய பிரதமருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
எனினும் தடுப்பூசி போடுவதில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு குறைவாகவே உள்ளது என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். தடுப்பூசி போட தொடங்கிய முதல் 4 மாதங்களில் குறைவாக போட்டதாலே தமிழ் நாட்டின் சராசரி குறைவாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். கடந்தகால பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் கூடுதலாக தடுப்பூசியை ஒன்றிய அரசு வழங்க ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். தமிழ் நாட்டில் நடத்தப்பட்ட இரு மெகா தடுப்பூசி இயக்கம் மூலம் 45.34 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
