முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் தரம்! குழந்தைகளிடம் கேட்ட உதயநிதி!

மதுரை பயணத்தின் ஒரு பகுதியாக, விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை நாராயணபுரம் பேரூராட்சி நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார்.

அவர் குழந்தைகளுடன் அமர்ந்து உணவின் தரத்தை சரிபார்க்க காலை உணவை எடுத்துக் கொண்டார். அப்பொழுது உணவு சுவையாக இருக்கிறதா என்றும் குழந்தைகளிடம் கேட்டார்.

சென்னை வழித்தடங்களில் தனியார் பேருந்துகள்? போக்குவரத்துத்துறை மின் சிவசங்கர் விளக்கம் !

இதனிடையே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இந்த ஆய்வின் போது மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங், மண்டல தலைவர் வாசுகி சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.