நாளை மறுநாள் முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் முதல்வர்! முதல் பிரச்சாரத்திலேயே கோவை மக்களை சந்திக்கும் ஸ்டாலின்!!

தமிழக மக்களே பல வருடங்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தங்களது வேட்பாளர்களை அறிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்றைய நினைத்துக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்ததும் நிறைவு பெற்றது. இந்த நிலையில் தமிழகத்தில் வேட்பாளர்கள் பலரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களை கவரும் வகையில் பல சுயேச்சை வேட்பாளர்களும் நூதன முறைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மறுநாள் முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். தமிழகத்தில் நாளையதினம் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி முதல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். நாளை மறுநாள் கோவையிலும், பிப்ரவரி 7ஆம் தேதி சேலத்தில், பிப்ரவரி 8ஆம் தேதி கடலூரிலும், பிப்ரவரி 9ஆம் தேதி தூத்துக்குடியிலும் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

பிப்ரவரி 10ஆம் தேதி ஈரோட்டிலும், பிப்ரவரி 11ஆம் தேதி கன்னியாகுமரியிலும், பிப்ரவரி 12ஆம் தேதி திருப்பூரிலும், பிப்ரவரி 13ஆம் தேதி திண்டுக்கல்லில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment