News
“முதலமைச்சர் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தருவார்” அமைச்சர் உறுதி!
தற்போது நம் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறுகிறது. அந்தப்படி நம் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் மு க ஸ்டாலின். மேலும் அவர் தமிழகத்தில் முதன் முறையாக முதல்வராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தான் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார் அவர் கூறியது வாக்குறுதிகளில் பலவும் இன்றளவும் நிறைவேற்றப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் மக்களுக்கு உதவி பண்ண அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் கொண்ட குழுவினை உருவாக்கி உள்ளார்.
மேலும் அந்த அமைச்சர்களும் அவ்வப்போது பல்வேறு விதமான செயல்களில் ஈடுபட்டு மக்கள் மனதில் இடம் பிடித்து உள்ளனர். அவர்களை மிகவும் குறிப்பிடத்தக்கவர் சுப்பிரமணியன். மேலும் இவர் நாட்களாகவே செய்தியாளர்கள் சந்திப்பில் அதிகமாக காணப் பட்டார் என்பதும் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை சைதாப்பேட்டையில் பருவ காலத்திற்கு முந்தைய காலகட்டத்தில் உள்ள கழிவுகளை சுத்திகரிக்கும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் அங்கு செய்தியாளர் சந்திப்பில் சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி நாம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தருவார் என அமைச்சர் சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். மேலும் நீதிபதி ராஜன் குழு அறிக்கையை இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் தமிழகத்துக்கு நீட் தேர்வு ரத்து தொடர்பாக எந்த ஒரு சந்தேகமும் தேவையில்லை என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கமாக கூறியுள்ளார்.
