கவர்மெண்ட் பஸ்: திடீர் விசிட் செய்த முதல்வர்!ஷாக்கான பெண்கள்!!

நம் தமிழகத்தின் முதல்வராக உள்ள முக ஸ்டாலின் தேர்தல் அறிக்கைகள் பலவற்றையும் வரிசையாக நிறைவேற்றினார். அதிலும் பெண்களை கவரும் வண்ணமாக அவர் வெளியிட்ட பல தேர்தல் அறிக்கைகள் பெண்களுக்கு மிகவும் பிரயோஜனமாக அமைந்துள்ளதாக காணப்படுகிறது.ஸ்டாலின்

குறிப்பாக அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்று அறிவித்திருந்தார். இது இவ்வாறு இருக்கையில் திடீரென்று இன்று சென்னையில் அரசு பேருந்தில் திடீரென்று ஏறி முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அவர் மெகா தடுப்பூசி முகாமுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த அரசு பேருந்தில் ஏறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.கண்ணகி நகரில் அரசு பேருந்தில் ஏறிய முதல்வர் முக ஸ்டாலின் பயணிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

இலவச பேருந்து சேவை எந்த அளவிற்கு இருக்கிறது என்பது பற்றி பெண்களிடம் கேட்டறிந்தார் முதல்வர் முக ஸ்டாலின். டி நகர்-கண்ணகி நகர் வரை சென்ற M19B பேருந்தில் ஏறிய முதல்வர் முக ஸ்டாலின் உடன் பயணிகள் செல்பி எடுத்தனர்.முதல்வரின் இந்தப் பேருந்து வருகையால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உறைந்து காணப்பட்டனர்.ஆனால் மக்களோ மிகுந்த குஷியுடன் காணப்பட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment