பாஜக உறுப்பினருக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் !! எதற்காக தெரியுமா ?
மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதை விட்டு தேவை இல்லாத அரசியலை புகட்டி கட்சியை பலப்படுத்த நினைத்தால் அது நடக்கவே நடக்காது என பாஜக உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எச்சரிகை விடுத்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை இந்து சமநிலை அறைநிலையத்துறை ஏற்றுக்கொண்டது குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சட்டப்பேரையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு பக்தர்களின் பணத்தை ஒரு கும்பல் சுரண்டி வருவதாக குறிப்பிட்டார். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் கும்பல் என்று பேசுவது சரியா என குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் சாமானிய மக்களின் பெட்ரோல், டீசல் ,சமையல் எரிவாயு போன்ற பிரச்சனைகளில் பாஜக உறுப்பினர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் சேகர் பாபு அயோத்தி மண்டபத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைப்பெற்று வந்ததாகவும் அரசின் மீது மாய பிம்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைத்தால் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் அஞ்ச மாட்டார் என அவர் தெரிவித்தார்.
