களப்பணி ஆற்றும் முதல்வர் கடலூர் பயணம்! 2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் ஆய்வு!!

களப்பணி ஆற்ற முதல்வராக தற்போது வளம் வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஏனென்றால் தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

 

ஸ்டாலின்

அதோடு தற்போது தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் தீவிர அவசர ஆலோசனை நடைபெற்று உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் என பலரும் பங்கேற்று உள்ளனர்.

இந்த ஆலோசனையின் விளைவாக  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

அதன் வரிசையில் இன்று மாலை கடலூர் மாவட்டத்திற்கு சென்று விவசாய நிலங்கள் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆலோசனையில் எந்தெந்த டெல்டா மாவட்டங்களில் விவசாயம், வீடுகள் போன்ற மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பற்றி தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment