Connect with us

தருமபுரியில் தடம் பதிக்க முயற்சிக்கும் முதல்வர்! ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தால் பெருமிதம்!!

hogenakkal

செய்திகள்

தருமபுரியில் தடம் பதிக்க முயற்சிக்கும் முதல்வர்! ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தால் பெருமிதம்!!

தருமபுரியில் தடம் பதிக்க முயற்சிக்கும் முதல்வர்! ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தால் பெருமிதம்!!

நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் நாள்தோறும் புதுப்புது திட்டங்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி கொண்டே வருகிறார். அந்த வகையில் இன்று சேலம்-தர்மபுரி இடையே ரூபாய் 250 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தர்மபுரியில் புதிய பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து முதலமைச்சர் பெருமிதம் கொண்டார்.

எனது வாழ்நாளில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான திட்டம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். ரூபாய் 157 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2.0 , ரூபாய் 4600 கோடியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறினார். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இதனால் தர்மபுரி மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். தர்மபுரியை மையமாகக் கொண்டே என்று ஸ்டாலின் அனைத்து நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top