அரசு ஊழியர்களுக்கு ஹேப்பியான செய்தி: அகவிலைப்படி 14 சதவீதம் உயர்வு; இன்று முதல்வர் ஆணை வெளியீடு!

இன்றைய தினம் அரசு ஊழியர்களுக்காக மிக முக்கியமான அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி அரசு பணியாளர்கள் ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அகவிலைப்படியில் ஜனவரி 1 2022 முதல் 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிடவும், சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்கிடவும் 8594 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

அதன்படி அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படியில் பெற தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 1-1- 2022 ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என 7-9- 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதியுள்ள பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை 14 சதவீதம் உயர்த்தி 1-1-2022 ஆம் ஆண்டு முதல் பதினேழு சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிட என்று தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இதனால் அரசுக்கு ஆண்டு நேரடியாக 8250 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். மேலும் பொங்கல் பரிசாக சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு ரூபாய் 3000, ஓய்வூதியர்களுக்கு 500 வழங்கிடவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் மற்றும் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஓய்வூதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு 500 ரூபாய் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆணையிட்டுள்ளார்.

இதன் காரணமாக அரசுக்கு தோராயமாக 169.56கோடி அளவிற்கு செலவினம் ஏற்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment