வருங்கால முதலைமைச்ரே – அண்ணாமலைக்கு வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது வீட்டிற்க்கு உணவு உண்ண சென்ற பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை வரவேற்று பேனர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க நிலைப்பாடு குறித்து பிரச்சாரம் செய்து வரும் நிலையில் பட்டியல் இனத்தவர் வீடுகளுக்கு நேரடியாக சென்று பா.ஜ.கா வின் திட்டங்கள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

அதிவேகத்தில் மோதிக் கொண்ட பேருந்துகள்: 3 பேர் பலி!!

இந்நிலையில் பா.ஜ.க வினரால் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் எழுத்துப்பிழையுடன் எழுதியுள்ளனர். விளம்பர பதாகையில் வருங்கால முதலமைச்சரே என எழுதுவதற்கு பதிலாக வருங்கால முதலைமைச்சரே என எழுதப்பட்டுள்ளது.

மேலும் தவறாக எழுதப்பட்டுள்ளது என அறிந்த நிர்வாகிகள் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தினர். இத்தகைய பிழை போஸ்டரால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment