Connect with us

தமிழ்நாட்டில் வெள்ள சேதம்-ரூபாய் 6,230 கோடி நிதி கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

வெள்ள சேதம்

செய்திகள்

தமிழ்நாட்டில் வெள்ள சேதம்-ரூபாய் 6,230 கோடி நிதி கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டில் வெள்ள சேதம்-ரூபாய் 6,230 கோடி நிதி கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை யாரும் மறக்க மாட்டார்கள். ஏனென்றால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முழுவதும் தமிழகத்தில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மழைநீர் சாலைகள், வீடுகள் என அனைத்திலும் புகுந்தது. இதன் விளைவாக சாலைகள் சேதம் அடைந்தன. குடியிருப்புப் பகுதிகளும் மோசமான நிலைமைக்கு காணப்பட்டது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசிடம் வெள்ள சேதம் காரணமாக 6230 கோடி ரூபாய் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் பெரும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ரூபாய் 6 ஆயிரத்து 230 கோடி வழங்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஏற்கனவே மூன்று கோரிக்கைகள் அனுப்பியதாக எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் நினைப்பூட்டியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவின் மூன்றாவது அலை தாக்கி உள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள வேண்டி நடவடிக்கை எடுத்துள்ளது அரசு என்றும் கூறியுள்ளார்.

கொரோனா சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நிதி தேவைப்படுவதால் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். வெள்ள பயிர்களை விவசாயிகள், மக்களுக்கு நிவாரண தொகையை ஏற்கனவே அரசு வழங்கி விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்குமாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top