நீலகிரி-வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை!

நேற்றைய தினம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் கருகி உயிரிழந்தார்.

முப்படை தலைமை தளபதி

அவரோடு சேர்த்து அவரது மனைவி மதுலிக்கா ராவத் உட்பட 13 பேர் விபத்தில் உயிரிழந்தனர். விமானத்தை ஓட்டிய கேப்டன் மட்டும் 80 சதவீத காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்நிலையில் இன்றைய தினம் அவர்களுக்கு நீலகிரி,வெலிங்டனில் மரியாதை செலுத்தப்படுகிறது. அதன்படி முப்படைகளின் தலைமைத் தளபதி  பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து முதலமைச்சர்  ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

பிபின் ராவத் மனைவி மதுலிக்கா ராவத் உடலுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். நீலகிரி-வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் விபத்து உள்ளிட்ட 13 பேரின் உடல்களும் முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகள், வீரர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.அங்கு உயிரிழந்த வீரர்களுக்கு இராணுவ மரியாதையோடு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment