கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி என்பது விற்பனையா என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பசனகவுட யாத்னாலை முதலமைச்சராக அக்கட்சித்தலைமை ரூ.2.500 கோடி பணம் கேட்டதாக வெளியான தகவலை சுட்டிக்காட்டியுள்ளார்.
பசனகவுட யாத்னால் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு மிகவும் முக்கியமானது என்றும் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மையை வெளிக் கொண்டுவர முடியும் என அவர் கூறினார். விசாரணை நடத்த தற்போதைய முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை தயார் இல்லை என கூறினார்.
இதனால் அவரும் பல கோடி ரூபாய் பணத்தை கொடுத்து அப்பதவியை வாங்கிய உள்ளது அர்த்தம் என்றும் பசனகவுட யாத்னால் சொல்லியதை பார்க்கும் போது பாஜக அரசின் ஊழல் ஏராளமாக இருப்பதாகவும் அவரிடம் இருந்து தகவலை வெளிப்படுத்த விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
பாஜகவில் ஏழம் விடுபடுவது முதலமைச்சர் பதவியோடு அதுமட்டுமில்லாமல் அமைச்சர்கள் பதவிகளும் அவ்வாறு எழுந்துள்ள புகார்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென கூறினார்.