தமிழக முதல்வர் ஊழலில் சாதனைப்படைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சர்வசாதாரனமாக கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக இபிஎஸ் கூறியுள்ளார். அதே போல் காவல்துறை டிஜிபி அவர்கள் கஞ்சாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆப்ரேஷன் கஞ்சா 2.0 என்ற அறிவிப்பை வெளியிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் கிட்டத்தட்ட 102 டன் கஞ்ச பிடிப்பட்டதாக கூறியுள்ளார். இதனிடையே இவ்வளவு கஞ்சாவை விற்பனை செய்துள்ளதால் தமிழகம் முழுவதும் எவ்வளவு கஞ்சா இருப்பதை எண்ணி பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் மாணவர்கள், இளைஞர்களின் வாழ்வு சீரழிவதை கண் கூட பார்ப்பதாகவும் கஞ்சா விற்பனையில் சும்மார் 2020 வழக்குகள் இருந்தாகவும் இதில் 148 பேர் மட்டும் தான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கஞ்சா இருந்தால் மட்டுமே வழக்கு தொடரமுடியும் என்ற பட்சத்தில் அவ்வளவு நபர்களையும் ஏன் கைதுசெய்யவில்லை என கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், இதற்கு ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த வழக்குகளில் தலையிடுவதால் காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறினார்.