இவங்க தான் கடைசி பேட்ஜ்… விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்!

உக்ரைனில் இருந்த தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தாயகம் திரும்பிய கடைசி அணி மாணவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று வரவேற்றார்.

உக்ரைன் – ரஷ்யா போரால் இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்கள் வாழ்வா? சாவா? என்ற போராட்டத்திற்குள் சிக்கிக் கொண்டனர். சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உக்ரைனில் போர் நடக்கும் பகுதிகளில் சிக்கிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து மத்திய அரசின் “ஆப்ரேசன் கங்கா ” என்ற திட்டத்தின் மூலம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மாணவர்கள் பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.

உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்பதற்காக முதல் அமைச்சரால் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய மீட்புக்குழுவினர் டெல்லியில் தங்கியிருந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

இதன் விளைவாக பல கட்டங்களாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாயகம் திரும்பி வந்தனர். இந்நிலையில் உக்ரைன் நாட்டில் போர் காரணமாக சிக்கியிருந்த தமிழக மாணவர்களின் கடைசி குழு தமிழகம் திரும்பிய நிலையில் சென்னை விமான நிலையத்தில் மாணவர்களை பூங்கொத்து கொடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.

உக்ரைனில் இருந்து இதுவரை 1,464 மாணவர்கள் தமிழகத்துக்கு வந்துள்ளனர். 366 பேர் அரசின் துணையின்றி தங்களது சொந்த செலவிலேயே வந்து விட்டனர். 34 மாணவர்களுக்கு ஊருக்கு வர விருப்பம் இல்லை என திருச்சி சிவா தகவல் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment