மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது? – முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து அத்தொகுதிக்குட்பட்ட அக்ரஹாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார்.

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வரும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஈரோடு பிரச்சாரத்தில் உறுதி அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், ஈ.வி.கே.சம்பத் மிக பெரும் சொற்பொழிவாளர் கம்பீரக் குரலை பெற்றவர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் பெரியாரின் அண்ணன் மகன் சம்பத் அவரின் திருமகன் ஈவிகேஎஸ் இளங்கோவன். சம்பத் மைந்தனுக்கு கலைஞர் மகன் ஓட்டு கேட்டு வந்திருக்கின்றேன்.

திருமகன் ஈவேரா இந்த தொகுதி மக்களுக்காக சிறப்பாக பணியாற்றினார் 46 வயதில் உயிரிழந்தார் இந்த தொகுதிக்கு அவர் செய்த பணிகளை நீங்கள் மறக்க மாட்டீர்கள் அவருடைய தந்தை மட்டுமல்ல இந்த பகுதி மக்களும் வேதனை அடைந்தார்கள் இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தலை சந்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது தந்தை இறந்து அந்த இடத்திற்கு பூர்த்தி செய்ய மகன் வருவான் ஆனால் யாருக்கும் வராத சூழ்நிலை மகன் இறந்து அந்த இடத்திற்கு தந்தை வந்திருக்கின்றார். இதை புரிந்து கொண்டு மக்கள் மாபெரும் வெற்றியை தேடி தர வேண்டும்.

திமுக அளித்த வாக்குறுதிகள் மற்றும் உறுதி மொழிகள் நிறைவேற்றித் தரப்படும் என்ற நம்பிக்கையோடு தேர்தலில் வாக்களித்தீர்கள் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு காலத்தில் செய்திருக்கும் சாதனைகளை சொல்ல வேண்டும் என்றால் மிகப்பெரும் பட்டியலை சொல்ல வேண்டும். கலைஞர் சொல்வதைப் போல், சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம். இந்த ஸ்டாலின் சொல்லாததையும் செய்வான். மகளிருக்கு இலவச பேருந்து தேர்தல் நேரத்தில் சொல்லியிருந்தோம்.

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து திமுக ஆட்சியில் எதையும் செய்யவில்லை என சொல்லி வருகிறார் அவருக்கு தெரியவில்லை என்றால் கண் மருத்துவரை பார்த்து பரிசோதிக்க வேண்டும் அல்லது பேசிய பேச்சையாவது கேட்டு பார்க்க வேண்டும் உண்மையா என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும் 85 சதவிகித தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றி இருக்கின்றோம் அப்ப அதை இந்த ஆண்டு காலம் செய்ய வேண்டியது வேண்டியது உறுதிகளாக சொல்லி இருக்கின்றோம் இன்னும் ஆண்டுக்குள்ளாக வாக்குறுதிகளையும் நிறைவேற்றி காட்டுவோம்.

நான் சாதாரண ஸ்டாலின் அல்ல முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன்..
பெண்களுக்கான ஆயிரம் ரூபாய் உரிமை தொகை நிதிநிலை ஒழுங்காக இருந்திருந்தால் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றி இருப்போம். கஜானா காலியாக மட்டுமல்லாமல் கடன் வைத்து சென்றார்கள்.. அதனை சரி செய்து வருகின்றோம். அவை சரி செய்யப்பட்டவுடன் உறுதியாக வருகிற மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த அறிக்கையில் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு எப்பொழுது வழங்கப்படும் என்பதை அறிவிக்க இருக்கின்றோம். இது எடப்பாடிக்காக சொல்லும் வார்த்தை அல்ல.. ஸ்டாலின் சொல்லும் வார்த்தை நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.