நாகை மீனவர்களை மீட்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்!!!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோடி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போதிலும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் இன்னும் குறைந்தபாடில்லை. குறிப்பாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த 20-ம் தேதி கைது செய்தனர். அதே போல் தமிழகத்தை சேர்ந்த 92 படகுகள் இலங்கையில் உள்ளதால் மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே தற்போது நிலவி வரும் சூழல் காரணமாக மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உரிய நடவடிக்கை வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 18 பேர் இலங்கைக் சிறையில் உள்ளதாக அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment