பள்ளி தமிழ் பாடப்புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தமிழ் மொழிக்கான பங்களிப்பு வரும் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, ​​​​கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்த குறிப்புகள் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்படும் என்று கூறினார்.

பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு தற்போது புத்தகங்கள் அச்சிடப்பட்டு விரைவில் பாடப்புத்தகம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திமுக தலைவர் கருணாநிதி ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தன வாழ்நாளில் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியியுள்ளார் நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.

மதத் தலங்களை இணைத்து சுற்றுலா வழித்தடத்தை உருவாக்க வேண்டும்: வானதி

.மேலும் “நண்பனுக்கு”, “உடன்பிறப்பே” என்னும் தலைப்புகளில் 7000-இக்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது , இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.