Connect with us

டி.ராஜேந்தரை நலம் விசாரித்த தமிழக முதல்வர்!!

am

Tamil Nadu

டி.ராஜேந்தரை நலம் விசாரித்த தமிழக முதல்வர்!!

உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் டி.ராஜேந்தரை பார்த்து தமிழக முதல்வர் உடல் நலம் குறித்து கேட்டறிந்துள்ளார்.

இயக்குனர் மற்றும் நடிகருமான டி.ராஜேந்தர் இருதய பிரச்சனை காரணமாக கடந்த சில தினங்களாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு வயிற்றில் ரத்த கசிவு ஏற்பட்டு உள்ளதால் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு விசா எடுக்கும் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி. ராஜேந்திரை நலம் விசாரிக்க தமிழக முதல்வர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருடம் அமைச்சர் கே.என் நேருவும் உடன் சென்றுள்ளார்.

தற்போது டி .ராஜேந்திரை அவரது மனைவி மற்றும் அவரது மகன் உடனிருந்து கவனித்து வருகின்றனர். மேலும் விசா எடுக்கும் பணிகள் முடிந்து உள்ளதால் நாளை அல்லது நாளை மறுநாள் அமெரிக்கா செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rajendran

Rajendran

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top