News
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை தொடங்கினார்!
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக வேட்புமனுத்தாக்கல் பல கட்சி வேட்பாளர்களும் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்யும்போது ஒரு தொண்டர்கள் கூட வராமல் தனியாக சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தற்போது அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். அவர் தான் போட்டியிடயுள்ள எடப்பாடி தொகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள நங்கவள்ளியில் முதலமைச்சர் தனது பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.
அப்போது அவர் ,எடப்பாடி என்றால் அனைத்து தொகுதிகளிலும் முதல்வரின் தொகுதி என்று அனைவரும் கூறினர் என்று எடப்பாடி தொகுதி குறித்து பெருமிதமாக கூறுகிறார். மேலும் அவர் பெரியசோரகை பகுதியில் வீடு வீடாகச் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
