News
முதல்வர் எடப்பாடி பழனிசாமி-பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் தனபாலன் சந்தித்தார்!
சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் அதிமுகவானது பாமக, பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது. தேமுதிக-அதிமுகவுடன் கூட்டணி இருக்குமா? இல்லையா? என்பது இன்னும் சில நாட்களில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சென்னையில் உள்ள பசுமை வெளியில் உள்ள அவரது வீட்டில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன் சந்தித்தார்.
தேர்தல் நேரத்தில் முதல்வருடன் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கூட்டணி இருக்குமா? இல்லையா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.
