Connect with us

எகிறும் கொரோனா பாதிப்பு: தமிழக முதல்வர் இன்று ஆலோசனை!!!

ஒமைக்ரான்

தமிழகம்

எகிறும் கொரோனா பாதிப்பு: தமிழக முதல்வர் இன்று ஆலோசனை!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடம் தமிழக முதல்வர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பானது 2,069-ஆன பதிவாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 800-என்ற அடிப்படையில் கொரோனா பதிவாகியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

சுமார் 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற ஜூலை 10-ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைப்பெற உள்ளதால் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்ட போதிலும் இதனை கடைபிடிக்காமல் இருப்பதால், இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டமானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top