
தமிழகம்
3 துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை: முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக நிலக்கரி பற்றாக்குறையினால் மின் தட்டுப்பாடு ஏற்படுவது போன்ற பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 3 அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே பள்ளிக்கல்வித்துறை ,சமூகநலத் துறை, மின்சாரத் துறை தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கும் சூழலில் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிகிறது.
மேலும், இந்த ஆலோசனை கூட்டமானது இன்று காலை 10.30 மணிக்குக்கு தொடங்கி நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
