News
ஆனந்தகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்! “அவரை நியமித்ததே என் அப்பாதான்”
தற்போது நாட்டில் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் இந்த கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் பல பேரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆனந்த கிருஷ்ணன் காலமானார். மேலும் அவருக்கு 92 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் இந்த நோயினால் சிகிச்சை அளிக்க வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மறைந்த ஆனந்த கிருஷ்ணருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். அதன்படி நேர்மையான அறிவிப்பு மிகுந்த கல்வி தொண்டு ஆற்றிய ஆனந்தகிருஷ்ணன் மாணவர் சமுதாய கலங்கரைவிளக்கம் என்றும் கூறினார். மேலும் கான்பூர் ஐஐடி தலைவராக இருந்த ஆனந்த கிருஷ்ணனை அண்ணா பல்கலை துணைவேந்தராக நியமித்தது என் தந்தையாகிய கலைஞர் தான் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த உயர் கல்வி அளிக்கும் உட்கட்டமைப்பு உருவாக்கியவர் இந்த ஆனந்தகிருஷ்ணன் என்றும் நம் தமிழ் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக ஆட்சியின்போது நுழைவுத்தேர்வு ரத்து செய்யக காரணமாக இருந்த ஆனந்தகிருஷ்ணன் தான் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். கிராமப்புற மாணவர்கள்தற்போது பொறியாளர்களாக மருத்துவராக வர முடிந்தது இந்த ஆனந்த கிருஷ்ணனின் அறிக்கையால் தான் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வராக ஆலோசகராக இருந்து தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட காரணமாக இருந்தவர் இந்த ஆனந்த கிருஷ்ணன் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
கலைஞர் ஆட்சிக்காலத்தில் பொறியியல் கல்வியில் ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்தியவர் இந்த ஆனந்தகிருஷ்ணன் என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் பெருமைக்குரிய கல்வியாளர் இழந்திருப்பது கல்வி உலகத்துக்கு மாபெரும் இழப்பு காணப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் இணைய மாநாடு நடத்தி இணையத்தில் தமிழில் பயன்படுத்தியவர் இந்த ஆனந்தகிருஷ்ணன் என்றும் கூறியுள்ளார்.
