
Tamil Nadu
தமிழக முதல்வரே !! நிலக்கரி தட்டுப்பாட்டை போக்கி மின்வெட்டை சரி செய்க – எடப்பாடி பழனிசாமி;
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது.
இந்த சூழலில் நிலக்கரி கொள்முதல் செய்து தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சேலத்தில் இலவச பயிற்சி மையத்தை திறந்து வைத்து அவர் செய்தியாளர்களின் சந்தித்து பேசும்போது தமது இல்லத்திலும் காலை 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதாக கூறினார்.
இதனிடையே மின்சாரம் இல்லாமல் இரவில் தூங்க முடியுமா என்றும் குறிப்பாக நகரப் பகுதியில் சொல்லவே வேண்டாம் என கூறினார். மின்வெட்டினால் தமிழக மக்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளாகி இருப்பதாக கூறினார்.
இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாகவே மின்தடை ஏற்பட்டு இருப்பதாகவும் எனவே மின்தடையை சரி செய்ய தமிழக அரசு உடனடியாக தேவையான நிலக்கரியை கொள்முதல் செய்து தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
