செய்திகள்
முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு: போட்டி போடும் பாஜக பிரமுகர்கள்!
கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளதை அடுத்து பாஜக பிரமுகர்கள் முதல்வர் பதவிக்காக போட்டி போட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அவர் வயது மூப்பு காரணமாக விரைவில் ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் எடியூரப்பா டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரையும் சந்தித்து பேசியபோது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்வது உறுதி என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்று முன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் இன்று மதியம் கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுக்கப் போவதாகவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கர்நாடக மாநில முதல்வர் பதவியை பிடிக்க பாஜக பிரமுகர்கள் பலர் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
