Connect with us

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!!

ஸ்டாலின்

செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!!

ஆட்சிக்கு வந்து பத்து மாதங்களிலேயே அனைவரிடமும் நல்பெயரினை  பெற்று வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி நன்றி தெரிவித்ததாக தெரிகிறது.

தமிழக நீதித்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் சென்னை ஐகோர்ட்டுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக ஹைகோர்ட் தலைமை நீதிபதி என்னிடம் கூறினார் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறினார்.

தமிழ்நாடு வளர்ச்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உழைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் நீதிபதி கூறினார். மேலும் நிதித் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை அளித்து வருகிறேன் என்றும் நீதிபதி கூறினார்.

வழக்காடு மொழி விவகாரத்தில் சில தடைகள் இருந்தாலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காணப்படும் என உயர் நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top