தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு:திட்டமிட்டபடி மே 2ல் வாக்கு எண்ணிக்கை!

3345410e44b7ced4a49551c52812370e

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. சட்டமன்றத் தேர்தலின்போது வாக்காளர்கள் அனைவரும் வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர். மேலும் அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னர் வாக்களிக்க அனுமதித்தனர். தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ளார் சத்யபிரதா சாகு. தேர்தல் சமயத்தில் பல்வேறு முக்கியமான தகவல்களை செய்தியாளர்கள் மத்தியில் கூறியிருந்தார். மேலும் தமிழகத்தில் ஆட்கொல்லி நோயான கொரோனாநோய் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை ஆண்டு மே 2-ஆம் தேதி எண்ணப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது கொரோனா தாக்கத்தின் காரணமாக எண்ணப்படும் தேதி குறித்து சர்ச்சைகள் இருக்கின்றன. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரியை சத்யபிரதா சாகு கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் திட்டமிட்டபடி மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அவர் கூறினார்.

மேலும் இந்த கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடைபெறும் என்றும் அவர் கூறினார். வாக்கு எண்ணிக்கையில் கொரோனா தாக்கம் ஏற்படுமா? என்பது குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. மேலும் அதிகாரி மற்றும் ஏஜெண்டுகளுக்கு பரிசோதனை செய்யலாமா? வேண்டாமா?என்பது பற்றியும் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment