வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு; இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு?

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் தமிழகத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அனைத்து வாக்காளர்களும் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கும் நிலையில் தமிழகத்தில் இதற்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆன்லைன் மூலமும் மையங்கள் மூலமும் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் உடன் இணைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில் மாவட்ட வாரியாக மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண்ணின் விவரங்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதனைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.