லஞ்ச ஒழிப்புத் துறை முதன்மை அதிகாரி நல்லம நாயுடு காலமானார்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இவர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருந்தவர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம நாயுடு.

நல்லம நாயுடு

இவர் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் முதன்மை அதிகாரியாக பணியில் இருந்தார். அதன்படி 1975 மற்றும் 2015 ஆம் ஆண்டு  மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை அதிகாரியாக இருந்தார் நல்லம்ம நாயுடு.

இவர் இன்றைய தினம் உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். இவருக்கு தமிழக முதல்வர்  ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருந்தார்.அதோடு மட்டுமில்லாமல் தமிழக முதல்வர்  ஸ்டாலின் சமீபத்தில்,தான் “என் கடமை-நீதி வெல்க” என்ற புத்தகத்தை என்னிடத்தில் நேரில் வந்து வாங்கி, தான் சந்தித்த சவால்களை, அதை எதிர்கொண்ட விதம் பற்றி என்னிடத்தில் பகிர்ந்து கொண்டார் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் நெஞ்சுவலியால் நல்லம நாயுடு உயிரிழந்தார். இவருக்கு தற்போது 83 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஜெயலலிதா மட்டுமின்றி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முதன்மை அதிகாரியாக விசாரணை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது இறுதிச் சடங்கு தேனி மாவட்டம் நாயக்கன் பட்டியில் நடைபெற உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment