கொரோனாவால் பாதிக்கப்பட்டார் முதலமைச்சர்! எந்த மாநில முதல்வர்?

தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு நம் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. ஏனென்றால் கடந்த இரு ஆண்டுகளாக நம் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு வேகமாக பரவியது. அதுவும் கடந்த ஆண்டு விழாவின் இரண்டாவது அலை காரணமாக பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் உயிரிழந்தனர்.

இந்தியாவின் பெரும் முயற்சியால் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளது மக்களுக்கு பெரும் சிரமத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனாவின் பாதிப்பு எதிர்பாராதவிதமாக உச்சத்தை எட்டியுள்ளது.

பொதுமக்கள் மட்டுமின்றி பல அரசியல் முக்கிய தலைவர்கள் மத்தியிலும் அதிகமாகவே தென்படுகிறது. இன்று காலை கூட தமிழகத்தில் பாஜக பேச்சாளரான நடிகை குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

 

nithish kumar 1

தொடர்ச்சியாக தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த கொரோனாவின் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்த சூழலில் முதல்வர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு கொரோனாவின் பாதிப்பு உறுதியாகியுள்ளது. பீகார்  முதல்வர் நிதிஷ்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, தான் தனித்து கொண்டதாக அவர் தகவல் அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment