சாதி பெயரை சொல்லி திட்டியதாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது வழக்கு !!
சிம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20- பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் பக்தர் சாமி கும்பிட சென்ற போது சாதியின் பெயரைச் சொல்லி திட்டியதாக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளான கணேஷ் தீட்சிதர் சில தினங்களுக்கு முன்பு சாமி கும்மிட சென்ற போது சக தீட்சிதர்கள் தடுத்து தாக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் சிதம்பரம் போலீஸார் மூன்று தீட்சிதர்கள் மீது கொலை முயற்சி, வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இதனைதொடர்ந்து மறுநாள் கணேஷ் தீட்சிதர் மற்றும் அவருடைய மகன் தர்ஷன் தீட்சிதர் ஆகிய இருவரும் கோவிலுக்கு சாமி கும்பிடும்போது சக தீட்சதர்கள் அவர்களை தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், சோழர்கள் கட்டிய நடராஜர் கோவிலில் கனகசபையில் யாரும் ஏறக்கூடாது என தீட்சிதர்கள் எப்படி உத்தர பிறப்பிக்க முடியும் என தர்ஷன் தீட்சிதர் கேள்விஎழுப்பினார்.
இதன் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 20 பேர் மீது கூட்டமாக சேர்ந்து தடுத்தல் , தாக்குதல் மற்றும் வன்கொடுமை போன்ற உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
