மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டிய விவகாரத்தில் திடீர் திருப்பம்!!

கடலூர் மாவட்ட சிதம்பரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து மாணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அதேபோல் மாணவியை வீட்டிலிருந்து அரசு நல காப்பகத்தில் அடைத்தனர். இந்நிலையில் அரசு காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள தன்னுடைய மகளை மீட்டு தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.

குஜராத்தில் வினோதம்! காதலனுக்கு பதிலாக தேர்வெழுதிய மாணவி..!!

இந்த மனு மீதான விசாரணையில் அரசு குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் மாணவி, மாணவன் விடுதலை செய்தனர். இருப்பினும் வழக்கை விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என முடிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் முன் அமர்வுக்கு வந்தது. அப்போது போக்சோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறையினர் கையாள்வது குறித்து புதிய விதிகளை வகுக்க ஆலோசனைகளை வழங்கி இருந்தனர்.

நெல்லை; பட்டா மாறுதல் பெற 8 ஆயிரம் லஞ்சம்.. வி.ஏ.ஓ அதிரடி கைது!!

இந்த சூழலில் வழக்கின் விசாரணை அமர்வு இன்று மீண்டும் வந்தது. அதில் வழக்கின் விசாரணையை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி சிறப்பு அமர்வுக்கு பரிந்துறை செய்தனர். மேலும், சிறப்பு அமர்வில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடம் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.