மதிய உணவு திட்டத்தில் சிக்கன்: முதல்வர் அதிரடி!

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தினை அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த வகையில் மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி மதிய உணவில் சிக்கன் மற்றும் பழங்கள் வழங்க முடிவெடுத்துள்ளதாக அம்மாநில அரசுகள் கூறியுள்ளது.

3 நாட்களில் 44 நீதிபதிகள்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அதிரடி!

இதற்காக சுமார் ரூ.371 கோடி ஒதுக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஜனவரி மாதம் முதல் வருகின்ற ஏப்ரல் மாதம் வரையில் வழங்கப்பட உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 1.16 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெறுவார்கள் என தெரிகிறது. அதே சமயம் எதிர்கட்சியினர் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஜன.11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

அதன் படி, உண்மையில் பள்ளி மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் இத்திட்டத்தினை வருடம் முழுவதும் தொடர வேண்டும் எனவும், ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் மட்டும் இத்தகைய அறிவிப்பை வெளியிடக்கூடாது என தெரிவித்துள்ளனர். மேலும், வருகின்ற மே மாதத்தில் அம்மாநிலத்தில் கிராமபுற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.