இந்த ஆண்டு முதலிடத்தில் சிக்கன் பிரியாணி! ஒரு நிமிடத்திற்கு 150 ஆர்டர்கள்!!: ஸ்விகி;

2021 ஆம் ஆண்டு நிறைவு பெற இன்னும் சில நாட்களே உள்ளன. அதனால் இந்த ஆண்டில் நடைபெற்ற சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகிக் கொண்டு வருகின்றன. நம் இந்தியாவில் தற்போது மிகவும் ஃபேமஸான ஃபுட் டெலிவரி நிறுவனமாக காணப்படுகிறது ஸ்விகி நிறுவனம்.

சிக்கன் பிரியாணி

அதில் இந்த ஆண்டு உணவுப் பிரியர்கள் மத்தியில் சிக்கன் பிரியாணி  முதலிடம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. சிக்கன் பிரியாணி, வெஜ் பிரியாணி விட 4.3 மடங்கு அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்விகி ஆண்டறிக்கையில் தகவல் வெளியானது.

அதோடு ஸ்னாக்ஸ் பட்டியலில் முதலிடத்தில் சமோசாவும், பாவ் பஜ்ஜி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளதாக கூறியுள்ளது. இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 150 சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்யப்படுவதாகவும் ஸ்விகி ஆண்டறிக்கையில் தகவல் கிடைத்தது.

அதாவது ஒரு நொடிக்கு இரண்டு பிரியாணி வீதம் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறியுள்ளது.  சென்னை, கொல்கத்தா, லக்னோ போன்ற பகுதிகளில் சிக்கன் பிரியாணி அதிக அளவுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

நடப்பாண்டில் புதிய பயனாளிகளில் 4.25 லட்சம் பேர் சிக்கன் பிரியாணியை தேர்வு செய்துள்ளதாகவும்கூறியுள்ளது இரவு 10 மணிக்கு மேல் சீஸ் கார்லிக் பிரட் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் சுகி நிறுவனம் கூறியுள்ளது. இதனால் உணவு பிரியர்கள் மத்தியில் இந்த ஆண்டு சிக்கன் பிரியாணிக்கு முதல் இடம் கிடைத்தது என்று ஸ்விகி கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment