புத்தாண்டு ஸ்பெஷல்! 49 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி… அலைமோதிய கூட்டம்!!

மதுரையில் புத்தாண்டு மற்றும் கடை திறப்பு விழாவை முன்னிட்டு பிரியாணி கடை ஒன்று ரூ.49 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கியதால் கூட்டம் அலைமோதியது.

மதுரை மாவட்டம் யானைக்கல் பகுதியில் இன்றைய தினத்தில் அல்ஷபா என்ற பெயரில் புதிய அசைவ ஹோட்டல் என்பது திறக்கப்பட்டது. இதனை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இன்று, நாளைய தினத்தில் ஹைதரபாத் சிக்கன் பிரியாணி ரூ.49 ரூபாய்க்கும், ஹைதரபாத் முட்டை பிரியாணி ரூ.39 ரூபாய்க்கும் வழங்கப்படும் என்ற சுவரொட்டி மதுரை மாநகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டது.

குளிர்பானத்தில் மயக்கமருத்து கொடுத்து பெண் பாலியல் பலாத்காரம்; சென்னையில் பரபரப்பு!!

இதனையடுத்து கடை திறக்கப்பட்டதால் 100-க்கும் மேற்பட்ட பிரியாணி பிரியர்கள் கூட்டமாக குவிந்தனர். குறிப்பாக பிரியாணி பிரியர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தங்களுக்கான பிரியாணியை பணம் கொடுத்து வாங்கி சென்றனர்.

அதே போல் சவர்மா ரூ.29 ரூபாய்க்கும், முழு கிரில் ரூ.199 ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆவலுடன் வாங்கி சென்றனர். மேலும், தற்போது திறக்கப்பட்டுள்ள கடையில் மற்ற கடைகளை விட குறைந்த விலைக்கே பிரியாணி விற்பனை செய்யப்படும் என ஹோட்டல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.