சிக்கன் பிரியாணி சாப்பிட்டதால் நேர்ந்த சோகம்.. 30 மாணவிகளுக்கு சிகிச்சை!

தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில், சிக்கன் பிரியாணி சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினத்தில் மாணவிகளுக்கு பிரியாணி சாப்பிட கொடுத்தாக தெரிகிறது.

அடுத்த 3 மணி நேரம் இந்த 7 மாவட்டங்களில்.. மக்களே உஷார்!!

அப்போது சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடிரென வாந்தி , வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் பதறிபோன மாணவிகள் பாதிக்கப்பட்ட மாணவிகளை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனையடுத்து மற்ற மாணவிகளுக்கு சோதனை நடத்தப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிர்ச்சி! பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவன் பலி..!!

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment