சிக்கனில் இருந்து துர்நாற்றம்! சிக்கிய 10 கிலோ இறைச்சி… நாமக்கல்லில் பரபரப்பு!!

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள கோல்டன் தாபா என்ற உணவகத்தில் கெட்டுப்போன 10 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நோட்டீஸ் அனுப்பினர்.

நாமக்கல் அடுத்த பரமத்தி சாலையில் கோல்டன் தாபா என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சீனிவாசன் என்பவர் நண்பர்களுடன் சாப்பிடசென்றதாக தெரிகிறது. அப்போது சிக்கன் லாலிபாப் ஆர்டர் செய்தனர்.

டேட்டிங் ஆப் மூலம் மோசடி.. போலீசார் எச்சரிக்கை!

இதனை சாப்பிடும் போது கோழி இறைச்சியில் புழுக்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து உணவக உரிமையாளர்களிடம் கேட்டப்போது சரியான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. பின்னர் உணவகத்தின் சமையலறை உள்ளிட்டவைகளை வீடியோ எடுத்துள்ளனர்.

அதோடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழு ஆய்வு நடத்தியதில் 10 கிலோ கெட்டுப்போன இறைச்சியை அழித்தனர்.

அடங்காத TTF வாசன்: காரை பறிமுதல் செய்த போலீசார்!!

மேலும், இது குறித்து விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஹோட்டலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.