பெரும் சோகம்! சத்தீஸ்கரில் துணை சபாநாயகர் திடீர் மரணம்..!!

கடந்த சில நாட்களாகவே அரசியம் பிரபலங்கள் மரணம் அடைவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநில சட்டசபை துணை சபாநாயகர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சத்தீஸ்கரில் தற்போதுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனோஜ் சின்ஹா மந்தவி இருந்து வருகிறார்.

இந்நிலையில் 58-வயதான இவருக்கு இரண்டு நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தம்தரி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சூழலில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் திடீரென சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு அம்மாநில முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment