Connect with us

சத்ரபதி சிவாஜிராஜே போசலே மரணம்: பிரதமர் மோடி இரங்கல்!!

modi

செய்திகள்

சத்ரபதி சிவாஜிராஜே போசலே மரணம்: பிரதமர் மோடி இரங்கல்!!

சத்ரபதி சிவாஜிராஜே போசலே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிவாஜி மகாராஜின் பன்னிரண்டாம் தலைமுறையாக இருக்கும் சத்ரபதி சிவாஜிராஜே போசலே உடல்நலக்குறைவு காரணமாக தன்னுடைய 75வது வயதில் காலமானார்.

இவரது உடலானது அதாலத் வாடாவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஆற்றல்மிக்க மற்றும் பன்முக ஆளுமையாக இருந்தவர் என்றும் சதாராவின் முன்னேற்றத்திற்கு அவர் பெரும் பங்களிப்பைச் செய்தவர் என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும், இவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

 
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top