பார்த்ததும் ஆசை வரும் செட்டிநாடு மசால் தோசை- வீட்டிலே எப்படி செய்யனு தெரியுமா?

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தோசைனா ரொம்ப பிடிக்கும் , அதுவும் மசால் தோசை யாருக்கு தான் பிடிக்காமல் போகும். வீட்டிலே செட்டிநாடு மசால் தோசை எப்படி செய்யனு தெரியுமா ..

தேவையான பொருள்கள் :

தோசை மாவு – 2 கப்,
வெங்காயம் – ஒன்று,
தக்காளி – ஒன்று,
காலிஃப்ளவர் – அரை கப் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தழுவியது,
பச்சை பட்டாணி – 2 மேசைக்கரண்டிவேக வைத்தது ,
பச்சை, சிகப்பு குடை மிளகாய் – 2 ,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – சிறு துண்டு,
பூண்டு – 4 பல்,
மிளகாய் தூள் – கால் டீஸ்புன் ,
மல்லி தூள் – அரை டீஸ்புன் ,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
சீரக தூள் – சிறிதளவு,
கரம் மசாலா தூள் – கால் டீஸ்புன், ம
ல்லி இலை – சிறிதளவு,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

மைக்கேல் டீசர்: கேங்ஸ்டர் சகாவில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கவுதம் மேனன்!

முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காலிஃப்ளவர், குடைமிளகாய், பூண்டு, இஞ்சி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும் .

எண்ணெய் சூடனாதும் அதில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கவும்.சிவந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்பிறகு தக்காளி மற்றும் காய் வகைகளை சேர்த்து வதக்கி கொள்ளவும் .

காய்கள் அனைத்தும் அரை வேக்காடானதும் உப்பு மற்றும் தூள் வகைகளை சேர்த்து மீண்டும் வதக்கவும்.வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி வைக்கவும்.தோசை கல்லில் மிகவும் மெல்லிய தோசையாக வார்த்து அதன் மேல் சிறிதளவு மசாலாவை பரப்பவும்.

பூஜை மணியில் இவ்வளவு ஆன்மிக தகவல் இருக்குதா? மிஸ் பண்ணிடாதீங்க!

இதனை திருப்பி போடக் கூடாது. அதனால் தான் மிகவும் மெல்லியதாக தேய்ப்பது மிகவும் முக்கியமானது.தோசையின் இரண்டு பக்கத்தையும் உள் புறமாக மடித்து நான்காக வெட்டி சட்னியுடன் பரிமாறவும். சுவையான செட்டிநாடு மசாலா தோசை தயார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.