Connect with us

செஸ் தீம் பாடல்! – முதல்வருக்கு வாழ்த்து கூறிய இசைப்புயல் !

Untitled design 2022 07 21T182954.115 16584085033x2 1

பொழுதுபோக்கு

செஸ் தீம் பாடல்! – முதல்வருக்கு வாழ்த்து கூறிய இசைப்புயல் !

தமிழத்தில் இந்த மாத இறுதியில் மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. வருகிற ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை, 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும், 186 நாடுகளைச் சார்ந்த 2500 செஸ் விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகளை வரவேற்க தமிழக அரசின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . மேலும் வீரர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 2 ஆயிரம் அறைகள் மற்றும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

download 2022 07 08T143703.223 1

இந்த நிலையில் செஸ் ஒலிபியாட் போட்டிக்கான விளம்பர படம் ஒன்றை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.அந்த விளம்பர திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளார்.மகாபலிபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில் போட்டியில் கலந்துக் கொள்பவர்களையும், பார்வையாளர்களையும், விருந்தினர்களையும் வரவேற்க ’வணக்கம் செஸ் சென்னை’ என்ற தீம் பாடல் தமிழக அரசின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் பாடலுக்கு இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நேப்பியர் பாலத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தினர்களை வரவேற்று அழைக்கும் வகையில் இப்படலில் இடப் பெற்றுள்ளார். அதோடு இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் பரதநாட்டிய கலைஞராக தோன்றியுள்ளார்.

812536

சமீபத்தில் வணக்கம் செஸ் சென்னை பாடலின் டீசனை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். தற்போது முழு வணக்கம் செஸ் சென்னை தீம் பாடலையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், “செஸ் சென்னை 2022, உலகையே நமது சென்னைக்கு கொண்டு வருகிறது.

‘லிங்கா’ கதையை மாற்றியது இவர்தான்! கே.எஸ்.ரவிக்குமார் அதிர்ச்சி தகவல்!

இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் , ஒரு சிறப்பான சர்வதேச நிகழ்வுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். நமது மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும், செஸ் வீரர்களுக்கும் மற்றும் இந்தியாவை பெருமைப்படுத்த உழைக்கும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top