Connect with us

வேற லெவல் தீம் பாடல்;; செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடல் வெளியீடு!!

chess olympiad

தமிழகம்

வேற லெவல் தீம் பாடல்;; செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடல் வெளியீடு!!

இந்தியாவை பெருமைப்படும் நிகழ்வு தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. ஏனென்றால் முதல் முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நம் தமிழகத்தில் தான் நடைபெற உள்ளது. இந்த போட்டியானது தலைநகர் சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டி ஜூலை 28ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் அதிதீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது.

அந்த வகையில்  ஓஎம்ஆர், ஈசிஆர் ரோடுகளில் வரிசையாக வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.இன்றைய தினம் செஸ் காய்கள் வடிவத்தில் சிலை ஒன்று திறக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்  இன்றைய தினம் செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான வரவேற்பு பாடலை விசுவநாத ஆனந்த் மற்றும் ஏ ஆர் ரகுமான் வெளியிட்டனர்.

அந்த பாடல் இணையதளத்தில் பதிலாக பரவிக் கொண்டு வருகிறது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை உடையில் அணிந்து செஸ் வடிவ பாலத்தில் நடந்து வருவது போல் அந்த பாடல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top